இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் நிலையங்கள்!

345
Advertisement

ரயில் நிலையம் என்றாலே குப்பையும் தூசியும் தான் நினைவுக்கு வருகிறதா? அதற்கு காரணம், இந்த அழகான, அற்புதமான ஆறு ரயில் நிலையங்களை நீங்கள் பார்க்காதது தான்.

அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், இவை இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்கள் என்பது தான். இயற்கை எழில் கொஞ்சும் ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் உள்ள பரோக் ரயில் நிலையம் காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஷொரனூர் – மங்களூர் வழித்தடத்தில் அமைந்துள்ள கேரளாவின் வல்லப்புழா ரயில் நிலையம் இரு புறமும் அடர்ந்த பச்சை பசேலென்ற மரங்களுக்குள் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. மழைக்காலத்தில் மனதை மயக்கும் விதமாக காட்சியளிக்கும் செருக்கரா ரயில் நிலையத்தை பார்த்தால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.

மேற்கு வங்கத்தின் டார்ஜீலிங் மாவட்டத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையமாக பார்க்கப்படுகிற சிவோக் ரயில் நிலையம் நவீனமும் இயற்கையும் கலந்த அழகை அள்ளித்தருவது போல அமைந்துள்ளது.

உத்தர்காண்டில் ஹல்ட்வானிக்கு அருகே இருக்கும் கத்கோடாம் ரயில் நிலையம், மிக பிரபலமான சுற்றுலாத் தளமான நைனிடாலுக்கு அண்மையில் இருப்பதோடு தனக்கே உரிய அழகில் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஆரவல்லி மலைத்தொடருக்கு நடுவே சென்று மேவருடன் மர்வாரை இணைக்கும் ராஜஸ்தானில் உள்ள கோரம் (Ghoram Ghat) காட் ரயில் நிலையம் இந்தியாவில் உள்ள மிகவும் பசுமையான ரயில் நிலையம் என்றால் மிகையாகாது.