தாஜ்மஹாலை விட மவுசு கூடிய மாமல்லபுரம்!

261
Advertisement

அண்மையில் வெளியான கணக்கீட்டில் தாஜ்மஹாலை விட நம்ம மாமல்லபுரத்திற்கு மவுசு கூடிவிட்டது.

சுற்றுலாத்தலங்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதிலும் தாஜ்மஹால் ,மாமல்லபுரம் ,ஊட்டி ,கொடைக்கானல் இதுபோன்ற குறிப்பிட்ட இடங்கள் நமது ‘BUCKET LIST-ல எப்போதுமே இருக்கும் இதில் மிக முக்கிய இடமான தாஜ்மஹாலை காட்டிலும் மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின்  வரத்து அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்பு திறக்கப்பட்ட இந்த சுற்றுலாத்தலங்களில் 38,922 பேர் தாஜ்மஹாலையும் ,1,44,984 பேர் மாமல்லபுரத்தையும் கண்டுகளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.