ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த நயன்தாரா !

368
Advertisement

நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகிறார்கள். நானும் ரௌடி தான் படத்தில் சேர்ந்து வேலை செய்தபோது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்து தற்போது அவர்கள் இருவரும் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள்.

நயன்தாரா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த வீடியோ ஒன்றில் ,கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு விக்னேஷ் சிவன் உடன் வரும் நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கும் , விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டதா என அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இதையடுத்து இருவருக்கும் தங்கள் திருமண வாழ்த்துகளையும் கூறிவருகின்றனர் ரசிகர்கள்.

இதற்குமுன் விக்னேஷ்- சிவன் நயன்தாரா இணைந்திருக்கும் வீடியோக்கள் , போட்டாக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்வது வழக்கமான ஒன்று என்றாலும் ,இந்த வீடியோ ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில்ஆழ்த்தியுள்ளது .

https://www.instagram.com/p/Ca_cZtcAFC2/

இருப்பினும், இதுகுறித்து இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.