மியான்மர் : முன்னாள் எம்.பி. உட்பட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை

228

மியான்மர் ராணுவ அரசு, ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை நிராகரித்து, முன்னாள் எம்.பி. உட்பட நான்கு பேருக்கு, துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மியான்மரில் ராணுவ புரட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம்.பி. பியோ ஸெயா தாவ் கைது செய்யப்பட்டார். சமூக ஆர்வலர் கியாவ் மின் யூ, ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும் கைது செய்யப்பட்டார். இதுபோன்று கைது செய்யப்பட்ட 4 பேருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இவர்களின் துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி, ஐ.நா, வியட்னாம் தலைமையிலான தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஆகியவை, மியான்மர் அரசை வலியுறுத்தின. அதை ஏற்க மறுத்த மியான்மர் ராணுவ அரசு, நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதற்கு, ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளும் மியான்மருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.