ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மும்பை – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

141
Advertisement

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, 4 அணிகள் பிளே-ஆப் போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் – சென்னை அணிகள், முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதின. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதை தொடர்ந்து நடைபெற்ற, எலிமினேட்டர் சுற்று போட்டியில், 3வது மற்றும் 4வது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணியை தீர்மானிக்கும், ஐ.பி.எல் 2வது தகுதிச்சுற்று போட்டி அகமதபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணியும், எலிமினேட்டர் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணியும் மோத உள்ளன. இதில் வெற்று பெறும் அணி இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோத உள்ளது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் இருமுறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.