மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவியது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
20 நாடுகளில் பரவி உள்ள குரங்கம்மையால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேலும் 2 நாடுகளுக்கு குரங்கம்மை பரவி உள்ளது.
மெக்சிகோவில் முதன் முதலாக ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அவர் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டுக்கு சென்று வந்திருந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல், அயர்லாந்து நாட்டிலும் குரங்கம்மை பரவி இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ஒருவருக்கு குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்.