Tax  கட்டியதற்கு பாராட்டு வாங்கிய டாப் மலையாள நடிகர்கள்

141
Advertisement

அரசுக்கு வரி செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் முக்கிய ஜனநாயக கடமை ஆகும்.

ஆனால், பெரும்பாலான மக்கள் ஏதாவது நெருக்கடியில் சிக்கும் வரையில் வரி கட்டாமல் இருப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சரியாக GST கட்டியதற்காக மோகன் லாலையும், முழுமையான வரித்தொகையை சரியான நேரத்தில் கட்டியதற்காக மஞ்சு வாரியரையும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை பாராட்டியுள்ளது.

Advertisement

இதே போல, கேரளாவை சேர்ந்த ஆசிர்வாத் சினிமாஸ் உரிமையாளரான  ஆண்டனி பெரும்பவூரும் வரியை தகுந்த நேரத்தில் செலுத்தியதற்காக பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தாலும் மோகன் லாலும் மஞ்சு வாரியரும் தவறாமல் வரி செலுத்தி இருப்பது, நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமான செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.