தன்னம்பிக்கை ஊட்டும் மித்தாலி ராஜின் கதை

242
Advertisement

ஆண்களுக்கு கேள்வி கேட்கப்படாமல் கிடைக்கும் எத்தனையோ உரிமைகள் மற்றும் வாய்ப்புகள், வாழ்நாள் முழுதும் போராடும் பெண்களுக்கு எட்டாக்கனியாகவே போவது, நம் நாட்டில் பரவலாக நிலவும் ஆணாதிக்க சூழலின் வெளிப்பாடே ஆகும்.

ஆண்களின் உலகமாக பார்க்கப்படும் கிரிக்கெட்டில், பல சவால்களையும் தடைகளையும் மேற்கொண்ட, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன், மித்தாலி ராஜின் வாழ்க்கையை தழுவி சபாஷ் மித்து என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற தனது கனவை யாருமே புரிந்து கொள்ளாத நிலையில், மித்தாலி தனது coachஇன் உதவியுடன் கடந்து வந்த வலி மிகுந்த பாதையை கருத்தாழமிக்க படமாக்கியுள்ளார் ஸ்ரீஜித் முக்கர்ஜீ.

23 வருட கிரிக்கெட் பயணத்தில், பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் போன்ற பல சாதனைகளை தனக்குரியதாக்கி உள்ளார் மித்தாலி. சபாஷ் மித்து திரைப்படத்தின் ட்ரைலரை, முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார். 

மித்தாலியின் தன்னம்பிக்கையூட்டும் கதை, சற்றும் விறுவிறுப்பு குறையாமல் படத்தில் காட்டப்பட்டிருப்பது ட்ரைலரில் உறுதியாகியுள்ளது.

தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து, உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் டாப்சீ பண்ணு, நடிக்கும் இந்த படம் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.