மார்வெலின் முதல் முஸ்லீம் சூப்பர்ஹீரோ

316
Advertisement

உலக சினிமாவின் போக்கை தீர்மானிக்கும் ஹாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளில்  வந்த படங்களில் 2 சதவீதம் மட்டுமே இஸ்லாமிய கதாபாத்திரங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிலும், பரவலாக இருக்கும் வெறுப்புணர்வு மற்றும் தவறான புரிதல் காரணமாக இஸ்லாமியர்கள் தொடர்ந்து வில்லன்களாக காட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது டிஸ்னியின் மிஸ் மார்வெல் என்னும் புதிய தொடரில், மார்வெல் தனது முதல் இஸ்லாமிய சூப்பர்ஹீரோவை அறிமுகம் செய்துள்ளது.

பாகிஸ்தானிய அமெரிக்கராக தோன்றும் மைய கதாபாத்திரத்தில், கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியரான இமான் வெள்ளாணி நடித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் ஒரு இஸ்லாமிய பெண்ணை சுற்றி சுழலும் அன்றாட வாழ்க்கைக்குள் மார்வெலின் சூப்பர்ஹீரோ பரிமாணங்கள் இணைகிறது.

இது போன்ற முற்போக்கான கதைக்களங்கள் ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்துக்கு வழிவகுப்பதோடு, சினிமாவில் பல்வேறு புதுமைகளை கொண்டு வரவும் பயனுள்ளதாக அமையும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.