ஆட்டநாயகன் விருதை மகன், மனைவிக்கு சமர்ப்பிப்பதாக கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்…

28
Advertisement

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் லேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

இதில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின்னர் பேசிய அவர், இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் வித்தியாசமாக பந்து வீசுவதை விட, துல்லியமாக பந்து வீசுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என கூறினார். மேலும், ஆட்டநாயகன் விருதை மகன், மனைவிக்கு சமர்ப்பித்த அவர், புதிதாக பிறந்த தனது மகனை இன்னும் பார்க்கவில்லை, ஐ.பி.எல். தொடருக்கு பிறகு பார்ப்பேன் என உருக்கமாக கூறினார்.