மகிழ்ச்சியில் துள்ளும் கர்நாடகா பெண்கள்.. இனி மாசா மாசம் ரூ.2000.. கெத்து காட்டிய சித்தராமையா!

250
Advertisement

கர்நாடகாவில் உள்ள அனைத்து குடும்பத் தலைவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்ற அசத்தல் வாக்குறுதிக்கு அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக ஒப்புதல் அளித்தார்.

அதுமட்டுமின்றி, காங்கிரஸ் கூறிய 5 தேர்தல் வாக்குறுதிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கட்டிலில் இருந்த பாஜகவை காங்கிரஸ் தூக்கியெறிந்தது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 135-ஐ காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, அங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

காங்கிரஸின் இந்த அமோக வெற்றிக்கு முக்கிய காரணங்களுள் ஒன்று, அக்கட்சி அளித்த 5 முத்தான வாக்குறுதிகள் தான். குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 நிதியுதவி, 200 யுனிட் வரை இலவச மின்சாரம், வேலை இல்லாதவர்களுக்கு ரூ.1500, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்துள்ளது.

இதனிடையே, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிக நிதி தேவை. எனவே, இதை செயல்படுத்த வாய்ப்பே இல்லை. மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பாஜக விமர்சித்து வந்தது.