பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க… இந்த நம்பர உடனே நோட் பண்ணுங்க

38
Advertisement

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 409 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்ப்பாலு குடிக்க தலையெழுத்து இல்ல… கள்ளிப்பாலை நீ குடிச்சு கண்மூடு நல்லபடி… அடுத்த ஒரு ஜென்மம் இருந்து ஆணாக நீ பிறந்தா பூமியில இடம் கிடைக்கும் போய்வாடி நல்லபடி என தேனி குஞ்சாரம்மா பாடியபடி, கையில் ஒரு பெண் குழந்தையை வைத்து கள்ளிப்பால் கொடுக்கப்போகும் நேரத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண் பிள்ளையை கொன்றால் சட்டம் தண்டிக்கும் என எதிர்பாட்டு பாடி கள்ளிப்பால் கொடுப்பதை தடுக்கும் காட்சியை மறக்கத்தான் முடியுமோ? பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சிரிப்பாகும் இருந்தாலும் சிந்திக்கவைக்கக்கூடிய ஒரு சீரியஸ் காட்சி அது. தமிழகத்தில் பெண் குழந்தைகள் பிறந்தால், கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் அவலம் இருந்தது.

இந்த அவலத்தை அரசின் அதிரடி நடவடிக்கைகளும், தொட்டில் குழந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஓரளவிற்கு கட்டுப்படுத்தின.

இதுமட்டுமல்லாது மருத்துவ அறிவியலின் உச்ச வளர்ச்சியானது குழந்தை கருவில் இருக்கும்பொழுது அது ஆணா ? அல்லது பெண்ணா? என கண்டறிவது. இதன்மூலம் கருவிலிருப்பது பெண் என தெரியவந்தால் கருக்கலைப்பு செய்யும் அவலங்கள் அரங்கேறி வருகின்றன.

பெண் சிசு கொலைகள் ஒருபக்கம் இருக்க, மற்றுமொரு பக்கம் குழந்தை திருமணங்களும் அதிகரித்துவருகின்றன. குழந்தைத் திருமணம் என்பது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தல்.

குழந்தை திருமணத்திற்கான பொதுவான காரணங்களில் ஒன்று, பெண் குழந்தை பிறந்ததிலிருந்து அவளை வேறொருவரின் சொத்தாகவே கருதுகின்றனர்.

குறிப்பாக, ஏழை மக்கள் தங்களது கடன் தொல்லை, வரதட்சணை மற்றும் பலவற்றிலிருந்து விடுபட குழந்தைத் திருமணத்தை நடத்துகிறார்கள். குழந்தை திருமணம்  குறிப்பாக சிறுமிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறது.

இதுமட்டுமல்லாது மதம், சமூக அழுத்தங்கள், கல்வியறிவின்மை

வீட்டுப் பொறுப்புகள் குழந்தைகள் மீது விழுகிறது. கையில் புத்தகத்தை எடுத்து படிக்கவேண்டிய சிறுமிகள் குழந்தைகளுடன் நிற்கும் அவல நிலை உருவாகிறது. அவர்கள் மன ரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ அதற்குத் தயாராக இல்லை, ஆனால் அது அவர்கள் மீது விழுகிறது.

இந்நிலையில் தான் ஓராண்டிலேயே 409 குழந்தை திருமணங்கள் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் வேலூர் மாவட்டத்தில் 62 குழந்தை திருமணங்களும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 40 குழந்தை திருமணங்களும், ராணிப்பேட்டையில் 26, திருவண்ணமலையில் 127 ,கள்ளக்குறிச்சியில் 14,கிருஷ்ணகிரியில் 37, தர்மபுரியில் 84, சேலத்தில் 19 என மொத்தமாக 409 குழந்தை திருமணங்கள் அரங்கேறியுள்ளன.

குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டு வர, இந்தப் பிரச்சினையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் இதுகுறித்து ஆலோசனைகள் வழங்கவேண்டும். இப் பிரச்சினையைத் தீர்க்க சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருந்துவருகிறது.

குழந்தை திருமணம் நடைபெறுகிறதென்றால் முதலில் அதனை  1098 என்ற child helpline நம்பருக்கு தொடர்புக்கொண்டு குறித்த தகவலை அளிக்கவேண்டும். அந்தந்த அந்தந்த மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட child welfare committee -ன் தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு அவர்களிடம் இதுகுறித்து முறையிடலாம். குழந்தை திருமணம் குறித்து பள்ளிகளிலும், பாடப்புத்தகங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அந்தந்த மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட child welfare committee -ன் தொலைபேசி எண்களை பள்ளிகளில் எழுதி ஒட்டவேண்டும்,  1098 என்ற child helpline என்ற எண்ணை அனைத்து பள்ளிகளிலும் எழுதி ஒட்டவேண்டும் என்பதே குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் வேண்டுகோளாக இருந்துவருகிறது.