பெண்களுக்கான ஸ்பெஷல் திட்டம்! 5000 ரூபாய் யாருக்கு கிடைக்கும்?

242
Advertisement

கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடல் மற்றும் மனநலன் மிகவும் முக்கியம்.

இதற்காக தேவையான நேரத்தில் கையில் பணம் இருப்பது அவசியம். கருவுற்றிருக்கும் பெண்களின் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட விஷயங்களால் நேரும் நிதிச்சுமையை குறைக்க கொண்டு வரப்பட்டது தான் PMMVY என அழைக்கப்படும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம்.

கர்ப்பப் பதிவின் போது 1000 ரூபாய், கர்ப்ப காலத்தின் 6வது மாதத்தில் குறைந்தது ஒரு பரிசோதனை செய்த பிறகு 2000 ரூபாய் மற்றும் குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறகு இறுதித் தவணையாக 2000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

இந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம் கர்ப்பிணிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக Direct Benefit Transfer மூலமாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற அடிப்படைத் தகுதியாக, கர்ப்பிணிகள் தினசரி ஊதியம் பெறுபவராக அல்லது வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.