‘பாலியல் புகார்’ பிரிஜ் பூஷண்- 2017-ல் கோவாவில் செய்த அந்த காரியம்-நன்றி மறக்காது முட்டு தரும் பாஜக…!

171
Advertisement

மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மத்திய அரசால் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அதில் ஒன்றுதான் கோவா விவகாரம்.

இந்தியாவுக்கு வெளிநாட்டு மண்ணில் பெருமையும் பதக்கமும் தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் பாஜக எம்பி பிரிஜ் பூஷண். இந்திய மல்யுத்த சங்க கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷண். தேசத்துக்கு பெருமை தேடி தந்த வீராங்கனைகள் கண்ணீரும் கம்பலையுமாக டெல்லி வீதிகளில் போராடிப் பார்த்தும் பிரிஜ் பூஷண் சிறைக்குப் போகவில்லை. அவரை சிறைக்கு அனுப்பவும் பாஜகவும் மத்திய அரசு விரும்பாது.

கிழக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிழல் உலக தாதாவாக கோலோச்சுகிற பிரிஜ் பூஷணால் பாஜக செய்ய வேண்டிய அறுவடைகள் ஏராளம். அதுவும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பிரிஜ் பூஷண் மீது கை வைப்பது என்பது கனவுதான் என்கிறது பாஜக வட்டாரங்கள்.


மேலும் உத்தரப்பிரதேசத்தை முன்வைத்து மட்டுமே பிரிஜ் பூஷணுக்கு பாஜக பக்கபலமாக நிற்கவில்லை. 2017-ம் ஆண்டு கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதில் மிக முக்கியமான பங்களிப்பை செய்தவரும் பிரிஜ் பூஷண் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். கோவா மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன

. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 21 இடங்கள். அத்தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 13; மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 3; கோவா முன்னணி கட்சி 3; தேசியவாத காங்கிரஸ் 1 இடமும் பெற்றிருந்தன.


அப்படி கோவாவில் ஒரு கட்சியை ஆட்சி அமைக்க ஆதரவு தரச் செய்யும் அளவுக்கு பிரிஜ் பூஷனுக்கு என்ன செல்வாக்கு என கேட்கிறீர்களா? அப்போது கோவாவின் முற்போக்கு மல்யுத்த சங்கத்தின் தலைவராகவும் விஜய் சர்தேசாவும் இருந்தார். இந்த மல்யுத்த விளையாட்டு லிங்க் மூலமே கோவாவில் அரசியல் சித்துவிளையாட்டு அரங்கேற பிரிஜ் பூஷணும் காரணமாக இருந்துள்ளார் என்கிறது அந்த செய்திக் கட்டுரை.