அடுத்தடுத்த படங்களில் Busy ஆகும் கமல்

354
Advertisement

விக்ரம் திரைப்படம் வெளியானது முதலே விறுவிறுப்பாக வசூலை குவித்து வேகமாக 200 கோடியை நெருங்கி வருகிறது. லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசன் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் Fahad Fasil மற்றும் சூர்யா அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சன ரீதியான பாராட்டுகளும் வந்த வண்ணம் உள்ளது.

விக்ரம் வெற்றிக்கு பிறகு நிலுவையில் உள்ள கமலின் படங்கள் ஒவ்வொன்றாக தூசி தட்டி எடுக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக டான் வெற்றி விழாவில் உதயநிதி தெரிவித்தார்.

இதையடுத்து, தசாவதாரத்தில் கமல் நடித்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தின் கதையாக, 2016ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு  பிறகு கிடப்பில் போடப்பட்ட சபாஷ் நாயுடு படத்தையும் நடித்து முடிக்க போவதாக கமல் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

2018க்கு பிறகு கமலின் படங்களையே திரையில் காணாத ரசிகர்கள் விக்ரம் படத்தின் வெற்றியோடு சேர்த்து கமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.