நெட்டிசன்களை வாயடைக்க வாய்த்த காஜல் அகர்வால்!

338
Advertisement

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ் & தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, பிரபாஸ், அக்ஷய் குமார், ஜூனியர் என்டிஆர் உட்பட பல நட்சத்திர கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தவர்.

அடுத்ததாக சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ஆச்சார்யா, பாலிவுட்டில் உமா, துல்கர் சல்மானுடன் தமிழில் ஹே சினாமிகா உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை காஜல் அகர்வால் கருங்காப்பியம் மற்றும் கோஸ்டி உள்ளிட்ட படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படங்கள் அனைத்தும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக தயாராகி வருகின்றன.

முன்னதாக நடிகை காஜல்அகர்வால் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை மணந்து கொண்டார்.

மேலும் நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கர்ப்ப காலங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த முக்கிய பதிவை தனது சமூக வலைதளங்களில் காஜல்அகர்வால் பகிர்ந்துள்ளார்.

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு உடல்ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மனரீதியாக ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு சமாளிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் நமது உடல் மாற்றத்திற்கு எதிராக உருவ கேலி செய்யும் நபர்களை எவ்வாறு கையாள வேண்டும்.

எந்த மாதிரியான மன தைரியத்தோடு பிரசவத்தை எதிர்கொள்ள வேண்டும் என பல முக்கிய தகவல்களை நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்துள்ளார்.

காஜல் அகர்வாலின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவிப்பதோடு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.