பிரதமருக்கு கொரோனா உறுதி

267

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், துசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டதால் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால், செலுத்திக்கொள்ளுங்கள் என்றம்,  பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளுங்கள் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

நம் சுகாதார கட்டமைப்பை பாதுகாப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.