ஜெயம் ரவி – நயன்தாரா மீண்டும் இணையும் புதிய படம்

376
Advertisement

கடந்த 2015ம் ஆண்டு எம்.ராஜா இயக்கத்தில் வெளியாகி மெகாஹிட் திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி, நயன்தாரா, தம்பி ராமையா, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், அபிநயா போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் கலந்த காதல் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்தது.தற்போது அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜெயம் ரவி – நயன்தாரா ஜோடி மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்த படத்தை அஹமத் இயக்கவிருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.