வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காணும் என அந்நாட்டின் கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் எச்சரித்துள்ளார்…

133
Advertisement

அமெரிக்க அரசுக்கு அதிகபட்சமாக 31.4 டிரில்லியன் டாலர் கடன் வாங்க உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெல்லன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜூன் 1ம் தேதிக்குள் கடன் உச்ச வரம்பு எட்டப்படும் என எச்சரித்தார். கடன் உச்ச வரம்பை எட்டும் பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு, ராணுவ வீரர்களுக்கு மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு சம்பளம் தர அரசிடம் பணம் இருக்காது என்றும்  உச்ச வரம்பை தாண்டி கடன் பெற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் ஆட்டம் காணும் எனவும் கூறினார். அமெரிக்க டாலரை வைத்து வர்த்தகம் செய்யும் பல நாடுகளும் வீழ்ச்சியை நோக்கி செல்லக் கூடும் என எச்சரித்தார்.