Advertisement
பிரதமர் மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரது இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்தளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாடுகளின் வளம் குறித்து பகிரப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.