8 அணிகள் பங்கேற்கும் TNPL டி20 கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் வரும் 12ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது…!

136
Advertisement

இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உதவி செயலாளர் ஆர்.என்.பாபா மற்றும் நெல்லை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, TNPL டி20 கிரிக்கெட் தொடரின் 7வது சீசன் வரும் 12ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தனர். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் உட்பட 8 அணிகள் இந்த சீசனில் பங்கேற்கும் என்றும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி, இந்த ஆண்டு பாலிசி திருச்சி அணி என்ற பெயருடன் களமிறங்கும் என்று அறிவித்தனர். கோவை, திண்டுக்கல் சேலம், நெல்லை ஆகிய நான்கு நகரங்களில் TNPL நடைபெறும் என்று தெரிவித்தனர். TNPL கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு முதல் டிஜிட்டல் தளத்திலும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.