ஐபிஎல் கோப்பையுடன் வெற்றி ஊர்வலம் சென்ற குஜராத் அணி

432
  1. IPL டி-20 கிரிக்கெட் லீக் தொடருக்கான இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தித்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாத்தித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சொந்த ஊர் திரும்பிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஹர்த்திக் பாண்ட்யா படைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திறந்த வெளி பேருந்தில் வந்த ஐபிஎல் சாம்பியன் அணியினர் வெற்றிக்கோப்பையுடன் ஊர்வலமாக வந்தனர்.

வழி நெடுகிலும் இருந்த ரசிகர்கள் அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர்.