இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2 வாரங்களுக்கு பின் மீண்டும் சரிவு

371

நாட்டின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வாராந்திர அறிக்கையில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 30.60 கோடி டாலர்கள் குறைந்து, 60 ஆயிரத்து 100 கோடி டாலராக சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2 வாரங்கள் அதிகரித்து வந்த நிலையில், இப்போது மீண்டும் சரிய தொடங்கியுள்ளது.

மே மாதம் 27ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்,அந்நியச் செலாவணி கையிருப்பு 385.40 கோடி டாலர்கள் உயர்ந்ததது.

அதற்கு முந்தைய வாரம், 423 கோடி டாலர்களாக உயர்ந்தது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு நிலை, 50 லட்சம் டாலர்கள் அதிகரித்து 502.50 கோடி டாலர்களாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.