விரைவில் துவங்கும் இந்தியன் 2

441
Advertisement

1996ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் திரைப்படத்துக்கு இரண்டாம் பாகம் எடுக்க 2018இல் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் பட்ஜெட், ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து என பல முட்டுக்கட்டைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், டான் படத்தின் 25ஆவது நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் இந்தியன் 2 படத்தை பற்றி கூறிய தகவல், விக்ரம் வெற்றியில் திளைத்து கொண்டிருக்கும் கமல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் அல்லிராஜாவுடன் படத்தை பற்றி பேசி வருவதாக கூறிய உதயநிதி, விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்துள்ளார். எனினும், உதயநிதி இந்தியன் 2 படத்திற்கு சுபாஸ்கரன் உடன் தயாரிப்பாளராக உள்ளாரா அல்லது விநியோக உரிமைகளை பெறப்போகிறாரா போன்ற விவரங்கள் இன்னும் வெளிவராமல் உள்ளது.