ஜெர்மனியில், ஊதிய உயர்வுகோரி விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பயணிகளின்றி விமான நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

101
Advertisement

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்றுவதற்கு கூடுதல் ஊதியம் வழங்க கோரி, விமான நிலையங்களில் பாதுகாப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால், 700 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஒரு லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மன் விமான நிலைய சங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, ஜெர்மனி ரயில்வே மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் நாடு தழுவிய போக்குவரத்து வேலை நிறுத்தத்தில் அழைப்பு விடுத்துள்ளது.