ஆஸ்திரியா நாட்டில் கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டதால் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

183
Advertisement

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு ‘போயிங் 777’ விமானம் ஒன்று புறப்பட்டது.

அந்த விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 300 பேர் இருந்தனர். இந்நிலையில் அந்த விமானத்தில் மொத்தம் இருந்த 8 கழிவறைகளில் 5 கழிவறைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்து தரையிறக்கப்பட்டது. பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது போன்ற ஒரு பிரச்சினை இதற்கு முன்பு ஆஸ்திரிய விமானத்தில் ஏற்பட்டது இல்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கழிவறை பிரச்சினை சரிசெய்யப்பட்டு, விமானம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.