ஆந்திர மாநிலத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முதலமைச்சர் வாகனத்தை நிறுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது….

94
Advertisement

ஆந்திர மாநிலத்தில், அனந்த்பூர் தும்பர்தி, மொதுமாரு ஆகிய பகுதிகளில் வீடுகள் கட்டிதருவதாக கூறி விவசாயிகளிடம் இருந்து 210 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என கூறி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சிங்கனமாலா தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புட்டப்பர்த்தி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனால், சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை உடனடியாக  அற்புறப்படுத்தினர்.