‘இத்தனை நாள் முட்டாளா இருந்திருக்கேன்’ திடீரென பாக்கியலட்சுமி  சீரியலை விட்டு விலகும் கோபி…

128
Advertisement

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியலான ‘பாக்கியலட்சுமி’ தொடரில் கோபி என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ்.

இவரது நடிப்பு மற்றும் ரோலுக்கு சீரியல் ரசிகர்களை தாண்டி மீம் creatorsஉம் ரசிகர்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில், இன்னும் பத்து பதினைந்து எபிசோடுகளுக்கு பிறகு ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலக போவதாக சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு பலருக்கும் கோபம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும் என்றாலும் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். இன்னொரு வீடியோவில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்றமே மிஞ்சும் எனக் கூறியுள்ள அவர் இவ்வளவு நாளாக முட்டாளாக இருந்திருக்கிறேன்.

உலகத்தை மாற்ற முடியாது.நாம் தான் மாற வேண்டும் என கருத்து பகிர்ந்துள்ளார். அண்மையில் நடைபெற்ற விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், பாக்கியலட்சுமி சிறந்த சீரியலாகவும், பாக்யலட்சுமியாக நடிக்கும் சுசித்ரா ஷெட்டிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்ட நிலையில், சதீஷின் நடிப்பிற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இதனாலேயே அவர் சீரியலில் இருந்து விலகி இருக்கக் கூடும் என தொலைக்காட்சி நேயர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.