இயக்குனர் செல்வராகவனுக்கு பிறந்தநாள்!

332
Advertisement

‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்த செல்வராகவனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் செல்வராகவன் உருவாக்கிய கதாபாத்திரங்களை மறப்பது சற்று கடினமான ஒன்றே.

‘காதல் கொண்டேன்’ தனுஷ் முதல் ‘நெஞ்சம் மறப்பித்தில்லை’ sj suriya உட்பட அணைத்து கதாபாத்திரங்களும் தமிழ் சினிமா அது வரை பார்த்திராத வகைகள்.

அதிலும் புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் திரைப்படங்கள் வெளிவந்த காலத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் re-release செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

அப்படங்கள் cult classic என புகழ்ந்து தள்ளப்பட்டது. நடிகர்கள் தாண்டி இயக்குநர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் ஒரு சிலரில் செல்வராகவனும் ஒருவர்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் செல்வராகவனுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.