குஷ்புவைச் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்த நடிகைக்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன் சுந்தர்.சி பேட்டி …

169
Advertisement

இயக்குநராகவும்  நடிகராகவும்  தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக திகழ்கிறவர் சுந்தர்.சி, இவர்  நடிகை  குஷ்பூவை  காதலித்து  2000ல்  திருமணம்  செய்துகொண்டார்.

தற்போது இவர்களுக்கு  இரண்டு  மகள்கள்  உள்ளனர், அதுபோல தற்போது சுந்தர்.சி  பிசியாக  சில படங்களை  இயக்கி  வருகிறார்,  அதே நேரத்தில்  குஷ்பூ  அரசியலில்  தீவிரமாக  ஈடுபட்டு  வருகிறார்.

இந்நிலையில் முன்பு  நிகழ்ச்சி  ஒன்றில்  பேசிய  சுந்தர் சி,  தான் குஷ்புவை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தால், தனது வாழ்க்கையில்  குஷ்பூ மட்டும்  வரவில்லை  என்றால்  நிச்சயம்  நடிகை  சௌந்தர்யாவுக்கு ப்ரொபோஸ்  செய்திருப்பேன்  என  கூறி  இருக்கிறார்.

தொடர்ந்து பேசிய  இவர்,  எனக்கு  மிகவும்  பிடித்த  இரண்டு ஹீரோயின்களில்  சௌந்தர்யாவும்  ஒருவர், குஷ்பூ  என்னுடைய வாழ்க்கையில்  வராத  பட்சத்தில்  நான்  செளந்தர்யாவிடம்  ப்ரொபோஸ் செய்திருப்பேன். ரொம்ப  நல்ல  பெண்  அவர், அப்படி  ஒருவரை  பார்ப்பதே அரிது  என சுந்தர்.சி  கூறி  இருக்கிறார்.