நாட்டை விட்டு வெளியேற கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு உத்தரவு

389

பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் மீண்டும் மக்கள் புரட்சி வெடித்ததை அடுத்து, உயிருக்கு பயந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறினார்.

முதலில் மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், அங்கும் எதிர்ப்பு கிளம்பிதை அடுத்து, அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

அங்கிருந்து தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற சபாநாயருக்கு அனுப்பி வைத்தார்.

இதனிடையே கோத்தபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கோத்தபய ராஜபக்சவுக்கு அடைக்கலம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ள சிங்கப்பூர் அரசு, நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.