பிரரெஞ்ச் ஓபன் – 3-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்

358

பிரரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.

இதில் 2-வதாக நடத்தப்படுவது பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி.

இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தின் இரண்டாவது சுற்றில், பிரான்ஸ் வீரர் Corentin Moutet மற்றும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3-6, 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

இதேபோல், மற்றொரு 2-வது சுற்று ஆட்டத்தில்,  தரவரிசையில் முதல் நிலை வீரராக உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்,  ஸ்லோவாக்கியாவின் அலெக்ஸ் மோல்கனுடன் மோதினார்.

இதில், 6-2, 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வென்றார். இதையடுத்து, ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோர், 3-வது சுற்றுக்கு முன்னேற்றியுள்ளனர்.