தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்

251
Advertisement

வழிநெடுகிலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்காக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேட்டியளித்த வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியா மற்றும் அமெரிக்கா வீரர்கள் கடும் சவலாக இருப்பார்கள் என்று, மங்கோலியா நாட்டை சேர்ந்த பெண் கிராண்ட் மாஸ்டர் அஸ்தோனியா தெரிவித்துள்ளார்.