ஜானி டெப்பை நெகிழ வைத்த ரசிகர்

514
Advertisement

நம்மில் பலருக்கும் Pirates of the Carribean படத்தொடர் மூலம் Jack Sparrow ஆக அறிமுகமான ஜானி டெப் பல தனித்துவமான கதாபாத்திரங்களில் தோன்றி தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த ஜானி டெப்பின் வாழ்க்கை ஒரு திருமணம், ஒரு விவாகரத்து மற்றும் ஒரு கட்டுரையால் தலைகீழாக திருப்பி போடப்பட்டு விட்டது.

2015ஆம் ஆண்டு Amber Heard உடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அடுத்த வருடமே விவாகரத்து கோரினார் Amber.

பின்னர், ஒரு பத்திரிகைக்கு Amber அளித்த பேட்டியில் பெயர் குறிப்பிடாமல் ஜானி டெப்பின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை Amber வைக்க இருவரும் பரஸ்பரம் வழக்குகளை தொடுத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அண்மையில் ஜானி டெப்புக்கு சாதகமான தீர்ப்புடன் நிறைவுக்கு வந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஓவியர் ஸ்காட் க்ரீன்வுட் (Scott Greenwood), ஜானியின் முகத்தை தத்ரூபமாக வரைந்து, அவருக்கு பரிசளித்து உள்ளார்.

https://www.instagram.com/reel/Cea4VB5KogY/?utm_source=ig_web_copy_link

ஜானிக்கு ஓவியத்தை வழங்கிய நெகிழ்ச்சியான தருணங்களை ஸ்காட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.