தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பாலா. சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு, நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றார். சூர்யா, விக்ரம், விஷால், ஆர்யா போன்றவர்களை நல்ல நடிகர்களாக மாற்றியவர் பாலா. தயாரிப்பாளார், இயக்குநர் என பல அவதாரங்களை கொண்டுள்ள பாலா. சினிமாவில் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறார்.
திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பாலாவின் நிஜ வாழ்க்கையில் தற்போது அதிர்ச்சிகரமான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. பாலா தனது மனைவியை பிரிந்தார் என்பது தான் அந்த அதிர்ச்சியான செய்தி. தனது உறவினர் பெண்ணான முத்துமலரை பாலா கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்துள்ளார்கள். பாலா – முத்துமலர் ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.
இரண்டு பேரும் கடந்த நான்கு வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்தனர். தற்போது, சட்டப்பூர்வமாக பிரிந்துள்ளனர். இதன்மூலம், 17 வருடங்கள் தம்பதி வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலாவின் விவாகரத்து விவகாரம் கோலிவுட்ட சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.