கமல்ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்திற்கு ‘ஜல்லிக்கட்டு’ படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சிறிது நாட்கள் முன்பு தான் முடிந்தது .விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனுடன் மேக்கிங் வீடியோவும் வெளியாகி உள்ளது.
BIGGEST ACTION ENTERTAINER என்ற அடைமொழியுடன் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. கார்கள் வெடித்து எரிவது, ரோட்டில் அடிப்பட்டு இருக்கும் விஜய் சேதுபதியின் முகத்தின் மேல் கால் வைப்பது, கிரிஷ் கங்காதரன், லோகேஷ் கனகராஜ் பேசுவது, ஆட்டோ கவிழ்வது, ஜெயில் கம்பிகளை உடைப்பது, விஜய் சேதுபதி துப்பாக்கி ஏந்துவது, பகத் பாசில், சாண்டி மாஸ்டரும் வீடியோவில் தோன்றி உள்ளனர். கடைசி 30 நொடி கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் மேக்கிங் வீடியோ நிறைவடைகிறது. அனிருத் பின்னணி இசை மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.