யூடியூபில் களமிறங்கிய எஸ்.ஏ.சி

424
Advertisement

இப்பொழுது சமுத்திரகனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ள இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் யார் இந்த எஸ்ஏசி என்ற புதிய யூடியூப் நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் நேரடியாக இணைய உள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குனர் சந்திரசேகர் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் தந்தையான இவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏன் நடிகர் விஜய்யின் ஆரம்பகால படங்கள் பலவற்றை இவரே இயக்கியுள்ளார்.

சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது.விரைவில் நான் கடவுள் இல்லை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரசிகர்களுக்காக புதிய அவதாரம் ஒன்றை எஸ்ஏசி எடுத்துள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பிரபலங்கள் முதல் சாதாரண மனிதன் வரை அனைவரும் யூடியூப் தளத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இதுவரை இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமாகிய இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரும் யூடியூப் தளத்தில் தோன்றி மக்களுடன் நேரடியாக தோன்றி வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளார். யார் இந்த எஸ்ஏசி? என்ற பெயரில் வெளியாகும் இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.