பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தான் டைரக்ட் பண்ணாரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

103
Advertisement

‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார்.

சாய் பல்லவி உடன் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற விருது விழாவில் ராஜ்குமார் பெரியசாமியும் கமல் ஹாசனும் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது, பெரியசாமியிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாசனை இயக்கிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பெரியசாமி கமல் ஹாசனுக்கு டைரக்டர் என ஒருவர் தேவைப்படாது எனவும், handle செய்ய மிகவும் சுலபமான நபர் என்றும் கூறியுள்ளார்.

ஒரு இடத்தில் கூட முகத்தை கடுமையாக்காமல் இந்த தலைமுறையினருக்கு ஏற்றவாறு கமல் நடந்து கொள்வார் எனவும், அவரால் எந்த ஒரு சிரமமோ, தாமதமோ வந்ததில்லை எனக் கூறியுள்ளார். மேலும், அவர் எந்த வேலை செய்தாலும் அதில் அர்ப்பணிப்பும் தொழில் தர்மமும் இருக்கும் என பகிர்ந்துள்ளார். தொலைக்காட்சி நேயர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தான் டைரக்ட் செய்தாரா என நெட்டிசன்கள் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.