தொடங்கியதா ’அஜித் 61’ அக்டோபரில் ரிலீஸா ?

274
Advertisement

‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். நாயகியாக நயன்தாரா அல்லது அதிதி ராவ் நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘அஜித் 61’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் மார்ச் 19 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பை முடித்து ’அஜித் 61’ படத்தினை வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.

இப்படத்தில் ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் படம் வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி உருவாகவுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ’மங்காத்தா’ படத்திற்குப் பிறகு அஜித், இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 25 கிலோ எடையை குறைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ‘அஜித் 61’ படத்தின் பூஜை படங்கள் வெளியாகி பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.