கிரிக்கெட் வேண்டாம் என்று ஓய்வு பெறவிருந்த வீரர்களை CSK-வில் ஜொலிக்க வைத்த தோனி…

226
Advertisement

ஐ.பி.எலில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக சி.எஸ்,கே இருக்கிறது, இதுவரை நான்கு முறை தோனி கோப்பையை வென்ற கதையெல்லாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் சென்னை அணியில் தோனியின் அறிவுரையைக் கேட்டு,

தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்ட வீரர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். 

இந்திய அணியில் தனது இடத்திற்காகப் போராடி கொண்டு இருந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை அணி அம்பதி ராயுடுவை வாங்கியது. அச்சமயத்தில் இருந்து அணிக்காக ஒரு நிலையான செயல்திறன் கொண்ட வீரராக திகழ்ந்து வருகிறார், இவரின் திறமையை இந்திய அணி சரியாக பயன்படுத்தவில்லை, ஆனால் தோனி இவரை சிறப்பாக பயன்படுத்தியுள்ளர், CSK விற்காக 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள ராயுடு, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அணி பட்டத்தை வெல்ல முக்கிய பங்கு வகித்துள்ளார். 

அஜிங்க்யா ரஹானேயின் கிரிக்கெட் வாழ்க்கை, சிஎஸ்கேவில் இணைந்தவுடன் தலைகீழாக மாறியுள்ளது. 2023 ஐ.பி.எலில் சிறப்பாக விளையாடி வருவதால், இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் ராஹானே. ஆனால் சி.எஸ்.கேவில் விளையாடி உடன் அவரது கம் பேக் சிறப்பாக உள்ளது.

ஷேன் வாட்சனின் திறமையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியவர் தோனிதான், தனது கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்தது என்று வாட்சனே நினைத்திருந்த சமயத்தில், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவரின் திறமையை வெளிப்படுத்த உதவினார் தோனி, 2018 ஆம் ஆண்டு சி.எஸ்.கே பட்டத்தை வெல்ல வாட்சன் முக்கிய பங்கு வகித்தார்.

ஆஸ்திரேலியா அணிக்காக மைக்கேல் ஹஸ்ஸி எந்த சமயத்திலும் ஓப்பனிங்கில் விளையாடியதில்லை, ஆனால் தோனி ஹஸ்ஸியை ஓப்பனராக விளையாட வைத்தார், அதற்குப் பிறகு ஹஸ்ஸி ஐ.பி.எலின் மிக சிறந்த ஓப்பனிங் பேஸ்ட்மேனாக திகழ்ந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ஆஷிஷ் நெஹ்ரா ஒரு குறுகிய காலம் மட்டுமே இணைந்திருந்தாலும், அதனை மறக்க முடியாது. 2014 மற்றும் 2015 இல் சென்னை அணிக்காக விளையாடிய ஆஷிஷ் நெஹ்ரா, முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமையை வளர்த்துக் கொண்டார்.

எனவே இவர்களில் தோனி யாரை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார் என்று கமெண்டில் சொல்லுங்கள்.