“ராக் வித் ராஜா”வில் முதல் வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியில் தேவி ஸ்ரீபிரசாத்

452
Advertisement

அண்மையில் புஷ்பா படத்திற்கு இசையமைத்து ஹிட் கொடுத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் அடுத்தடுத்து பல படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகி வருகிறார். இதனால் மகிச்சியில் இருக்கும் தேவிஸ்ரீ பிரசாத், இன்னொரு  மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

 மார்ச் 18 ஆம் தேதி, அதாவது நாளை  சென்னை தீவுத் திடலில் இசைஞானி இளையராஜாவின் ‘ராக் வித் ராஜா’ என்ற இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தீவுத்திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கும் பின்னணி பாடகர்கள் பலர் கலந்து கொண்டு இசை விருந்து படைக்க உள்ளனர்.

இந்நிலையில் , தேவி ஸ்ரீபிரசாத்தும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசை உலகின் கடவுளான இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து மார்ச் 18 ஆம் தேதி ராக் வித் ராஜா நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், முதன்முறையாக அவருடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.