‘செத்த மனுஷனுக்கு ஓடுற ECG Graph மாதிரி இருக்கு’ பொன்னியின் செல்வன் 2வை பங்கமாய் கலாய்த்த காமெடியன்.!

130
Advertisement

மணி ரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள “பொன்னியின் செல்வன்’ 2 கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒன்றாம் பாகத்தை விட இரண்டாம் பாகம் நன்றாக இருக்கிறது என ஒரு தரப்பினரும், இரண்டாம் பாகம் கல்கியின் கதையை ஒட்டுமொத்தமாக சிதைத்து இருப்பதாக ஒரு தரப்பினரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘கோமாளி’, ‘ஓ மை கடவுளே’ போன்ற படங்களில் நடித்துள்ள காமெடி நடிகர் ஷாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’வை பங்கமாக கலாய்த்துள்ளார். எம்ஜிஆர் சமாதியில் காது வைத்து கேட்டால், வாட்ச் ஒலிக்கும் சத்தம் கேட்கும் என என்றோ யாரோ கிளப்பிவிட்ட புரளியின் விளைவாக இன்றும் மக்கள், அவர் சமாதியில் காது வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே போலத் தான், எல்லோரும் போகிறார்களே என பொன்னியின் செல்வன் படத்திற்கு போகிறவர்கள் புண்ணாகி வருகிறார்கள். படத்தில் மட்டுமே சத்தம். ஆடியன்ஸ் எம்ஜிஆர் சமாதி போல மயான அமைதியில், போதும் நிறுத்திக்கலாம். செத்த மனுஷனுக்கு ஓடுற ஈசிஜி கிராஃப் மாதிரி ஒரே நேர்கோட்டுல இருந்தது பொன்னியின் செல்வன் எனக் குறிப்பிட்டுள்ள ஷாராவின் பதிவு சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.