தரமான கோச் இருந்தும் ஐ.பி,எலில் இருந்து முதல் அணியாக வெளியேறும் DC-யின் முக்கிய தவறுகள்

210
Advertisement

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி இடம் தோல்வியைச் சந்தித்தது டெல்லி அணி,

விளையாடிய 12 போட்டிகளில் 4இல் மட்டுமே வென்றுள்ளதால் டெல்லி அணியின் ப்ளே ஆப் சுற்றுக் கனவும் தகர்ந்தது. மொத்தமாக 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள டெல்லி அணி மீதமுள்ள இரு போட்டிகளில் வென்றாலும், அவ்வணியால் பிளே ஆப் சுற்றுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஆனால் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்படுகிறார், துணை பயிற்சியாளராக வாட்சன் மற்றும் அஜித் அகர்கர் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ஆலோசகராக கங்குலி இருக்கிறார், எனவே இப்படி உலகத் தரம் வாய்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு இருந்த டெல்லி அணி இந்த ஐபிஎல் தொடரில் படுமோசமான தோல்வியைச் சந்தித்து உள்ளது. முதல் 5 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்த டெல்லி அணி, அதன் பிறகு வெற்றிப் பாதைக்குத் திரும்பினாலும் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோனது.


அதுபோல டெல்லி அணியில் பேட்டிங்கில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடினர். இந்திய வீரர்கள் பிரித்வி ஷா, மாணிஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் சொதப்பியதும் டெல்லி அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.