தமிழக அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு, TR.பாலுவின் மகனும், மன்னார்குடி MLA-வுமான TRB.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்….

41
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

முன்னதாக கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். TR.பாலுவின் மகனும், மன்னார்குடி MLA-வுமான TRB.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதைதொடர்ந்து, நாளை காலை 10:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சி, TRB.ராஜா அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். TRB.ராஜாவிற்கான இலாக்கா குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படாத நிலையில், தமிழக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.