காமன்வெல்த் போட்டி – மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

2245

2022ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த காமன்வெல்த் போட்டியில், இந்த ஆண்டு முதன் முறையாக பெண்கள் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.

அதன்படி ஆண்கள் ஹாக்கி போட்டியின் கேப்டனாக மன்பிரீத் சிங்கும், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பட்டியலில் ஸ்ரீஜேஷ், கிரிஷன் பகதூர் பதக், வருண் குமார், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், ஜர்மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட ஷர்மா, மந்தீப் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக் ஆகியோர் இடம் பெற்றுள்ளன.