மார்வெல் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற மார்வெல் நடிகர்

208
Advertisement

அண்மையில் வெளியான மார்வெலின் Thor: Love and Thunder திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்ஒர்த் (Chris Hemsworth), நடாலி போர்ட்மேன் (Natalie Portman) உடன் கிறிஸ்டியன் பேலும் (Christian Bale) நடித்து இருந்தார்.

American Psycho, American Hustle போன்ற படங்களில் பிரபலமாக அறியப்பட்ட கிறிஸ்டியன் பேல், மார்வெலுக்கு எதிர் துருவமாக பார்க்கப்படும் DC பட வரிசையில் வரும் Batman கதாபாத்திரத்தில் நடித்ததால் பெரும் புகழ் பெற்றார்.

இந்நிலையில், தற்போது அவர் மார்வெல் அணியில் சேர்ந்து விட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில், தனக்கு மார்வெல் யூனிவெர்ஸ் என்றால் என்னவென்று கூட தெரியாது என்றும், ஒரேயொரு மார்வெல் படத்தை பார்த்ததாகவும், அதில் ஒரு நபர் கற்களை தேடி கொண்டிருந்தார் எனவும் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.