கனமழை, வெள்ளத்தால் 8 லட்சம் மக்கள் பாதிப்பு

333

சீனாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, மாகாணத்தின் 80 மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 76 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு, நேரடிப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி நிவாரணத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கனமழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.