16 வயது செஸ் வீரருக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை

459

உலகின் சிறந்த வீரர்கள் 16 பேர் பங்கேற்கும்  ‘மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் தொடரின்’  செஸ்ஸபல் மாஸ்டர்ஸ் ஆன்லைன்  சதுரங்கப் போட்டி  பிப்ரவரி மாதம் தொடங்கியது.

இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான சீனாவின் டிங் லிங்கிரனிடம் மோதி தோல்வியை சந்தித்தார்.

இதனால் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சர்வதேச செஸ் தொடரில் 2ம் இடம் பிடித்தார்.

இதனிடையே இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.