செஸ் ஒலிம்பியாட் போட்டி – விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

365

உலகில் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்தில் தான் மிக சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன் ஆனந்த், சென்னையைச் சேர்ந்த தமிழக செஸ்வீரராக இந்த மேடையில் நிற்பதில் பெருமை அடைகிறேன் என்று கூறினார். நேப்பியர் பாலம் முதல் ஆவின் பால் பாக்கெட் வரை விளம்பரம் செய்து, தமிழக அரசு மிக பிரமாண்டமாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தியுள்ளது என்று விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.