செஸ் ஒலிம்பியாட் போட்டி – மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

277

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உடன் செஸ் விளையாடினார்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பதால், அவர்களுக்கான வசதிகள், பார்வையாளர்களுக்காக செய்யப்பட்டு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் விளையாடினார். இதைதொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி, மாமல்லபுரத்தில் சிற்பக் கலைத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 அடி உயரத்தில் கலைநயத்துடன் சிற்பக் கலைத்தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பக் கலைத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்